Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இப்படிச் செய்கிறார்! ஜெ. அண்ணன் மகள் தீபா மீது காவல்நிலையத்தில் பகீர் புகார்!

பல கோடி ரூபாய் மோசடிசெய்ததாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மீது சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

Deepa

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவுக்கு அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தாெடர்ந்து எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தீபா தொடங்கினார். இந்த பேரவைக்கு நிர்வாகிகளை தீபா நியமனம் செய்தார். தனது ஆதரவாளர்களுக்கு பொறுப்பு வழங்கவில்லை என்று கூறி தீபாவின் கணவர் மாதவன் போர்க்கொடி தூக்கினார்.

இதைத் தொடர்ந்து புதிய கட்சி தொடங்குவதாக மாதவன் அறிவித்தார். ஆனால், இதுவரை அவர் புதிய கட்சித் தொடங்கவில்லை. இதனிடையே, தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தீபா வீட்டில் இருந்து மாதவன் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர், இன்று காலை தீபா மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் விண்ணப்பப் படிவம் பெற, தீபா பணம் வசூலித்ததாகவும்,  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அங்கீகாரம் ரத்தானதை மறைத்து,  தீபா பணம் வசூலித்துவருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close