Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மகன் என உரிமை கோரிய தம்பதியின் மனு தள்ளுபடி! நடிகர் தனுஷுக்கு ஆதரவாக தீர்ப்பு

மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கில், நடிகர் தனுஷுக்கு சாதகமாக இன்று இறுதித் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
மகன் என உரிமை கோரிய தம்பதியின் மனுவைத் தள்ளுபடிசெய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. 

dhanush

மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர், சிறு வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தனர்.

இந்த வழக்கில்,  நீதிமன்றத்தில் தனுஷ் ஆஜராக வேண்டும் என்று மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலூர் தம்பதியருக்கு எதிராக, தனுஷும் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவில்,‘‘மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, என்னை அவர்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதில் எந்த உண்மையும் இல்லை. அதனால், இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து, தள்ளுபடி செய்ய வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே கதிரேசன் தரப்பினர், தனுஷ் தங்கள் மகன்தான் என்பதற்கு ஆதாரங்களைத் தாக்கல்செய்தனர். தனுஷின் உடலிலுள்ள அங்க அடையாளங்களையும் குறிப்பிட்டனர்.

பல்வேறு திருப்பங்களைச் சந்தித்த இந்த வழக்கின்  இறுதித் தீர்ப்பு இன்று வெளியானது. தனுஷ் கோரிக்கையின்படி, மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கு, தள்ளுபடிசெய்யப்பட்டது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close