Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுக் கட்சி தொடங்கினார் தீபாவின் கணவர் மாதவன்! 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன், ஜெயலலிதா சமாதியில் இன்று புதுக் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். மாதவனின் புதுக் கட்சியின் பெயர், “எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்”.

Madhavan
 

கடந்த சில நாள்களுக்கு முன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் அவரின் கணவர் மாதவனுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகவும், அவர்கள் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியானது.  தீபாவின் 'எம்.ஜி.ஆர்.அம்மா தீபா பேரவை'யில் இருந்து மாதவன் விலகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.  கடந்த வாரம் தி.நகரில் உள்ள தீபாவின் இல்லத்தில், தீபாவுக்கும் மாதவனுக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. அதனால் தீபா, மாதவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 'தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' என்று மாதவன் விளக்கம் அளித்தார். மேலும், புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்தில், மாதவன் தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். “எம்.ஜி.ஆர் ஜெயலலிதா  திமுக” என்று கட்சிக்குப் பெயர் சூட்டி உள்ளார்.

படம் : கே.ஜெரோம்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close