Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் அமைச்சர்கள் சேர்ந்து வழங்கிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்

திருச்சி மாவட்டத்தில் 125 குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப அட்டைக்கு மாற்றாக ஸ்மார்ட் கார்டுகளை அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் திருச்சி கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. எம்.பிக்கள் ப.குமார், ரத்தினவேல் ஆகியோர் வழங்கினர்.

Ministers distrubutes Smart cards

நிகழ்ச்சியில் பேசிய வெல்லமண்டி நடராஜன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துவதில் மட்டும் சாதனையாளராக விளங்கவில்லை. அந்த திட்டங்கள், கடைகோடி பாமர மக்களுக்கும் தடையில்லாமல் பலனளிக்கிறதா என்று கண்காணிக்கும் வல்லமை கொண்டவராக இருந்தார். அதனால்தான் மக்களுக்கு பயனளிக்கும் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் முழுமையாக கணினிமயமாக்கி, ஆதார் எண் விவரங்களுடன் அவர்களுக்குத் தடையின்றி, தட்டுபாடின்றி உணவுப் பொருள்களை வழங்கிட உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் தற்சமயம் 7 லட்சத்து 57 ஆயிரத்து 230 குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. தற்போது முதற்கட்டமாக 30 ஆயிரத்து 81 ஸ்மார்ட் கார்டுகளும், அடுத்து 2-ம் கட்டமாக 2 லட்சத்து 24 ஆயிரத்து 171 கார்டுகளும் வந்துள்ளன. மொத்தம் இதுவரை 3 லட்சத்து 51 ஆயிரத்து 449 ஸ்மார்ட் கார்டுகள் வரப்பெற்றுள்ளன, அவற்றில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 113 மின்னணு குடும்ப அட்டைகள் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்” என்றார்.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close