Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஆடையைக் களைந்து சோதனை செய்தது போலீஸ்!” - நெடுவாசல் போராட்ட பெண்கள்!

நெடுவாசலில் அமைக்கப்பட்டிருக்கும் ஹைட்ரோ கார்பன் புராஜக்ட், தமிழக விவசாயத்தின் நிலை தொடர்பாக நடந்து வரும் போராட்டங்களை ஆதரித்து, கடந்த 15ஆம் தேதி ரயிலின் உள்ளே போராட்டம் செய்த வளர்மதி மற்றும் ஸ்வாதியை திருச்சி போலீசார்  கைது செய்து, நிர்வாணப்படுத்தி  கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். 

 

இதுகுறித்து, அந்த மாணவிகளின் வழக்கறிஞரான  எஸ்.ராஜா மற்றும் தமிழ் ராஜேந்திரனிடம் பேசினோம்.  

நெடுவாசல் மற்றும் தமிழக விவசாயங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில், கோவையிலுள்ள  பொது நல மாணவ எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த  ஏழு மாணவ-மாணவியர்கள்  கடந்த 15ஆம் தேதி ரயிலில் நெடுவாசலுக்கு புறப்பட்டார்கள். ரயிலின் உள்ளே தங்களின் போராட்டம் தொடர்பாக முழக்கமிட்டும், பறையிசை  அடித்துக்கொண்டும் வந்திருக்கிறார்கள். இதனை கேள்விப்பட்ட கரூர் போலீசார், அவர்களை  கரூர் ரயில் நிலையத்தில் கைது செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் போலீசாரின் கைது விஷயங்கள் ஊடகங்களுக்கு தெரிய வர, கரூர் ரயில் நிலையத்தில் அவர்கள் ஊடக நண்பர்கள் குவிந்திருக்கிறார்கள். 

இதைத் தெரிந்து கொண்ட போலீசார் கருரூக்கு முந்தைய ஸ்டேஷனான குளித்தலையில் வைத்து மாணவர் மாணவிகளை  மாணவியர்களை கைது செய்தனர். போராட்டக்கூட்டத்தில் இருந்த வளர்மதியையும், ஸ்வாதியையும் திருச்சி சிறையில் அடைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவில் இருந்த மற்ற மாணவர்களை அரியலூர் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அந்த வகையில்தான் ரயிலில் வந்த, மாணவர்களை கைது செய்த போலீஸார், தப்படிக்கும் குச்சியை தவிர வேறு ஒன்றையும் கையில் வைத்திருக்காத அவர்கள் மீது, ஆயுதம் வைத்திருந்ததாக வழக்கு போட்டதுடன், இவர்கள் நக்‌சலைட்டுகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக சித்தரிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மாணவர்கள், வெவ்வேறு கல்லூரிகளில் படிக்கிறார்கள்.

நான் வளர்மதியையும் ஸ்வாதியை பார்க்க திருச்சி மகளிர் சிறைக்குச் சென்றேன். ''எங்களை ஜெயில்ல போட்ட அன்னைக்கே உடை எல்லாம் களைஞ்சு நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தினாங்க சார். நாங்க அதைத் தடுத்து எதிர்ப்பு தெரிவிக்கவும், ஆபாசமான வார்த்தைகளால எங்களை திட்டினாங்க. இப்ப நீங்க ரெண்டு பேரும் டிரஸ்ஸை கழட்டுறீங்களா இல்ல வேற விதமான சித்ரவதைகளை அனுபவிக்க போறீங்களானு கேட்டு கொடுமைப்படுத்தினாங்க. பீரியட்ஸ் நேரத்துல அவசியமான நாப்கின் கூட தரலை சார். நாங்க கேட்டப்ப கண்டுக்காம போயிட்டாங்க'' என்று அந்த பெண்கள் என்னிடம் தெரித்தபோது அதிர்ந்து போனேன்.

கைது செய்யப்பட்ட வளர்மதியும் ஸ்வாதியும் நன்கு படிக்கக்கூடிய மாணவிகள். வளர்மதி இதழியலும், ஸ்வாதி கண் மருத்துவமும் படிக்கிறார்கள். இவர்கள் இருவரையும் ஏப்ரல் 15ம் தேதி போலீஸ் கைது செய்தது. ஏப்ரல் 17ம் தேதி இருவருக்கும் செமஸ்டர் தேர்வு என்று சொல்லி அதற்கான ஹால்டிக்கெட்டை காட்டியும் போலீசார் தேர்வு எழுத அனுமதி மறுத்திருக்கிறார்கள். இவர்கள் சம்பந்தமான வழக்கை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. செனனி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய இருக்கிறோம். நிச்சயம் அவர்களை வெளியில் கொண்டு வருவேன்" என்று முடித்துக்கொண்டார் வழக்கறிஞர் ராஜா.

கடைசியாக சிறையில் இருக்கும் மாணவி வளர்மதியின் நண்பர்கள் நம்மிடம், “மக்களுக்கான போராட்டங்களுக்காக போராடும் நாங்கள், நெடுவாசலில் நடக்கும் போராட்டத்துக்கு,கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்,கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உண்டியல் ஏந்தி, நிதி சேகரித்து,அந்தப் பணத்தைக் கொண்டுதான், கடந்த 15-ம்தேதி நெடுவாசலுக்கு கிளம்பி இருக்கிறார்கள். ஈரோட்டில் ரயிலில் ஏறிய போலீஸார்,  அவர்களுக்கு தொந்தரவு கொடுத்ததோடு, கரூரில் கைது செய்ய நினைத்துள்ளார்கள். அங்கு ஊடகங்கள் அதிகம் இருந்ததால், குளித்தலையில் கைது செய்தார்கள். வெறும் பறைக்குச்சி மட்டும் வைத்திருந்த என்னை, போலீஸார், ‘மாவோயிஸ்ட்’ என்கிறார்கள். அதை அவர்கள் நிரூபித்தால் நான் அந்த நிமிடமே மாவோயிஸ்டாகவே போகிறேன். இந்த சித்திரவதைகளுக்கு பயப்படமாட்டோம். சிறையில் இருந்து மீண்டாலும், நெடுவாசலுக்கு சென்று போராட்டத்தைத் தொடருவோம். ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்று வளர்மதி கூறியதாக கூறினர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close