Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பத்திரப்பதிவுக்கு மீண்டும் தடை விதித்தது உயர்நீதிமன்றம்!

அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை முறைப்படுத்தும் புதிய விதிகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் தரும் வரை, புதிதாக பத்திரப்பதிவு செய்ய மீண்டும் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் உள்ள விளைநிலங்களைப் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்க கோரி உயர்நிதிமன்றத்தில் கடந்தாண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கீகாரமற்ற பத்திரப்பதிவுகளுக்குத் தடை விதித்து தீர்ப்பளித்தது உயர்நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ் அடங்கிய அமர்வு, பத்திரப்பதிவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.

இந்நிலையில், வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜீ அடங்கிய அமர்வில் இன்று விசாரனைக்கு வந்தது. அப்போது, ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரையறை செய்வது தொடர்பான புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் அறிவிப்பாணையை வெளியிடப்படும்' என தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் வரை, அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வதற்கு இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை மே 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close