Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மதுசூதனன் ஒரு செத்த பாம்பு' - வெற்றிவேல் எம்.எல்.ஏ. பாய்ச்சல்!

பெரம்பூர் எம்.எல்.ஏ.வெற்றிவேல்சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போதே 'உயிருக்கு ஆபத்து' என்று போலீஸில் புகார் கொடுத்த அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன், மீண்டும் அதேபோன்ற ஒரு புகாரை போலீஸ் டி.ஜி.பி.யிடம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக மதுசூதனனிடம் பேசினோம். "போன மாதம் இருபதாம் தேதி எனக்கும், என் மாற்று வேட்பாளரான ராஜேஷுக்கும் டி.டி.வி. தினகரன் ஆட்களால் ஆபத்து இருக்கிறது என்று புகார் கொடுத்திருந்தோம். மேலும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் உயிருக்கும் அந்த நபர்களால் ஆபத்து இருப்பதாக அதே புகாரில் சொல்லியிருந்தோம். போலீஸில் புகார் செய்த பின்னரும் அந்தக் கும்பல் அடங்கவில்லை. ஆயுதங்களுடன் வந்து ஆர்.கே.நகரில் எங்கள் அலுவலகத்தையும், வீட்டையும் சூழ்ந்து கொண்டனர். டி.டி.வி. தினகரன் சொல்வதைக்கேட்டு எதையும் செய்யக்கூடிய பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேலிடம், தற்போது மீண்டும் எங்களைக் கொலை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கும்பல் குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி மக்களையும், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கோடானகோடி கழகத் தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டும். டி.டி.வி. தினகரன் எங்கும் ஓடிப் போய் விடவில்லை, ஒதுங்கியும் விடவில்லை. வெற்றிவேல் மாதிரியான ஆட்களை தூண்டிவிட்டுக் கொண்டு, இங்கேயேதான் இருக்கிறார்" என்றார்.                             

 மதுசூதனன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து வெற்றிவேல் எம்.எல்.ஏ-விடம் கேட்டோம். "மதுசூதனன் மீது மோசடி வழக்கு ஒன்று இருக்கிறது, அது முடிவடையும் நிலையில் உள்ளது. அந்த வழக்கில் எப்படியும் உள்ளே போய்த்தான் ஆகவேண்டும். அதுவரைக்கும் போலீஸ் பாதுகாப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் பார்க்கிறார். அ.தி.மு.க. ஓரே அணியாக இருந்தபோதும், இப்போதும் மதுசூதனன் வசிக்கும் வடசென்னை பகுதிக்கே, கட்சியின் மாவட்டச் செயலாளர் நான்தான். அப்போதும் சரி, இப்போதும் சரி, அவரை மிரட்டும் வேலையை நான் செய்ததில்லை. அதேபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்திலும் நான் அதைச் செய்ததில்லை. எழுபத்தைந்து வயதைக் கடந்த முதியவர் என்ற அனுதாபம் அவர் மீது எனக்கு எப்போதுமே உண்டு. பொதுவாக நான் செத்த பாம்பை அடிப்பதில்லை" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close