Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வீராணத்துக்கே தண்ணீர் தரும் கொள்ளிடத்தின் இன்றைய அதிர்ச்சி நிலை!

கொள்ளிடத்

'கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம்' மூலம் 13 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது கொள்ளிடம் ஆறாகும். சென்னைக்கு குடிநீர் கொடுக்கும் வீராணம் ஏரிக்கும், கொள்ளிடத்தின் கிளையாறான வடவாறுதான் நீரை கொண்டு செல்கிறது.  இத்தனை சிறப்புக்குரிய கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு குடிக்க நீர்இல்லை என்பதுதான் கொடுமையிலும், கொடுமை.  

நாகை மாவட்டம், கொள்ளிடம் ஒன்றியம் ஆணைக்காரன்சத்திரம் ஊராட்சியை சேர்ந்த சந்தப்படுகை கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி அமைந்திருக்கிறது.  ஆற்று நீரில் கடல் நீர் புகுவதால் உவர்நீராகி, நிலத்தடி நீரும் உப்புநீராக மாறிவிட்டது.  கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் இக்கிராமத்திற்கு இதுவரை குடிநீர் வழங்கவில்லை.  இந்நிலையில் மாங்கனாம்பட்டு கிராமத்திலிருந்து நிலத்தடி நீரை மின்மோட்டார் மூலம் எடுத்து குழாய்கள் மூலம் தினந்தோறும் காலை 9.00 மணிவரை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இப்படி வழங்கும் நீர் காவி நீராக இருப்பதால், குடிநீருக்கு பயன்படவில்லை.  அந்த நீரை கால்நடைகள்கூட அருந்துவதில்லை. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.  எனவே, புதிதாக போர்வெல் அமைத்து நல்ல குடிநீர் வழங்கக்கோரி கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் காலிக்குடத்துடன் பெண்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் வாசுதேவன், பி.டி.ஓ. மஞ்சுளா மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  10 நாட்களுக்குள் போர்வெல் அமைத்து குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  

கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் உள்ள அரசுகள் குடிநீர் சம்மந்தப்பட்ட திட்டங்களுக்குதான் அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன.  அந்த நிதியில் தடுப்பணைகள் கட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி, தட்டுப்பாடின்றி மக்களுக்கு குடிநீர் வழங்குகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மிகவும் முக்கியமான குடிநீர் பிரச்னையை தீர்க்க நிரந்தர திட்டங்களை தீட்டாமல் இலவச திட்டங்களுக்காக அரசு நிதியை வீனடித்து வருகின்றனர். மக்களுக்கு தட்டுபாடின்றி குடிநீர் தருவது அரசின் முக்கிய கடமை. உதாரணமாக கொள்ளிடத்தில் மட்டும் ஆண்டுக்கு 500 டி.எம்.சி. தண்ணீர் தேக்க வழியில்லாமல் கடலில் வீணாக சென்று கலக்கிறது. 11 இடங்களில் தடுப்பணைகள் கட்டச்சொல்லி, 11 ஆண்டுகளாய் விவசாயிகள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  அது தமிழக அரசுக்கு செவிடம் காதில் ஊதிய சங்காக இருக்கிறது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close