Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவலருக்கு அடி

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர் தோற்றத்தில் இருந்த நபர் காவலர் ஒருவரைத் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madras High Court


உயர் நீதிமன்ற ஆவின் கேட்டில், B4 காவல்நிலையத்தின் காவலர் கந்தவேல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காலை 9 மணி அளவில் வழக்கறிஞர் தோற்றத்தில் வந்த ஒருவரிடம், கந்தவேல் ஐடி கார்டை காட்டும்படி கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர் ஐடி கார்டை காட்டவில்லை. மாறாக, கந்தவேலிடம், அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், அந்த நபர் கந்தவேலை, கன்னத்தில் தாக்கிவிட்டு சென்றுவிட்டார்.

இந்த தாக்குதலில் கந்தவேலின், இடது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  கந்தவேல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
உயர் நீதிமன்றத்தில் காவலரை தாக்கிய, அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close