Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தொடரும் நெடுவாசல் போராட்டம்... ஆட்சியாளர்களை எச்சரிக்கும் மக்கள்!

நெடுவாசல் போராட்டம்

த்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் மீண்டும், கடந்த 14 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூக்குப்போடுதல், முட்டிப்போட்டுப் பிரார்தித்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல் என விதவிதமாக ஒவ்வொரு நாளும் அவர்கள் நூதன போராட்டங்களை நடத்துவதால், நெடுவாசல் போராட்டக்களம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இது, ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், “நெடுவாசலில் போராடுபவர்கள், தீவிரவாதிகள். இந்தப் போராட்டங்களைத் தீவிரவாத இயக்கங்கள் தூண்டிவிடுகின்றன” என்று பி.ஜே.பி-யின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். அவருடைய இந்தப் பேச்சால், நெடுவாசல் மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

நெடுவாசல் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சுப்பையன், “எங்களுக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதில், விளையும் பயிர்களைக்கொண்டு நிம்மதியா வாழ்றோம். அது, இந்த அரசாங்கத்துக்குப் பிடிக்கலையா? இவ்வளவு பசுமையான பூமியைச் சேதப்படுத்தித் துளையிட்டு, பல்லாயிரக்கணக்கான அடியில் உள்ள அந்த வாயுவை எடுக்கப்போறதா சொல்றாங்க. இந்தத் திட்டம், எங்க நிலத்துக்கு 100 அடி தூரத்தில்தான் வரப்போகுது. இங்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால், எங்களுக்குப் பாதிப்பு வராதா? 20 வருஷத்துக்கு முன் அதிகாரிகள் வந்து நிலம் கேட்டபோது, எங்களுக்கு அவ்வளவா விபரம் தெரியலை. அதைப் பயன்படுத்தி, எங்க நிலத்தை அழிக்கப் பார்ப்பது சரியா? எங்க நிலத்தைக் காப்பாற்ற நாங்க போராடுறோம். ஆனா, இந்த பி.ஜே.பி-காரங்க கொஞ்சம்கூட நாவடக்கம் இல்லாம இஷ்டத்துக்குப் பேசுறாங்க. அது ரொம்ப தப்பு. இங்கே எங்க மண்ணைக் காப்பாற்ற உணர்வோடு போராடுறோம்” என்றார்.

இதுகுறித்து போராட்டக் குழுவைச் சேர்ந்த விவசாயி பசுமைத் தோட்டம் ராமநாதன், “மத்திய, மாநில அரசுகள் எங்கள் உணர்வுகளைப் சுப்பையன்புரிந்துகொள்ளும் என நம்பிக்கையோடு இருந்தோம். அதனால்தான் திட்டம் அறிவித்ததிலிருந்து, ஒருமாதத்துக்கும் மேலாகப் போராடிய போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தோம். ஆனால், 'மக்கள் எதிர்த்தால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம்' என்று கூறிக்கொண்டே, இன்னொரு பக்கம் திட்டத்தைச் செயல்படுத்தும் துரோகத்தை அரசுகள் முன்னெடுத்துவருகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்பு, 'ஜெம் லெபாரட்ரிஸ்' நிறுவன அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தார்கள். அவர்களை விரட்டிவிட்டோம். இந்நிலையில்தான், 'இங்குப் போராடுகிறவர்கள் தீவிரவாதிகள்; இதன் பின்னணியில் பயங்கரவாத இயக்கங்கள் இருக்கின்றன' என்றெல்லாம் ஹெச்.ராஜா போராடும் எங்களை விமர்சித்து வருகிறார். ஹெச்.ராஜா மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நெடுவாசலுக்கு வந்தபோது, நாங்கள் அவர்களை எப்படி நடத்தினோம் என்பது அவர்களுக்கே தெரியும். நாக்கு இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது. எங்களுக்கும் நாக்கு இருக்கிறது. நாங்கள் கிராமத்து விவசாயிகள், தமிழர்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுப்பது எங்கள் வழக்கம். எங்களை மோசமாக விமர்சிக்கும் அவர்களுக்கும் அக்கா தங்கைகள் இருக்கிறார்கள். ஹெச்.ராஜா, இல.கணேசன் உள்ளிட்ட பி.ஜே.பி தலைவர்கள் எங்கள் போராட்டத்தை விமர்சிப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அன்பால் எச்சரிக்கிறோம். கடந்த 20 வருடங்களாக இந்தப் பகுதியில் பலர் பி.ஜே.பி-யில் இருந்துவருகிறார்கள். அவர்களும் போராடுகிறார்கள். இப்படிப் பேசினால் எப்படிக் கட்சி மீது மக்களுக்கு நல்ல அபிப்ராயம் வரும்; கட்சி வளரும்? மண்ணைக் காப்பாற்றுவதற்காகப் பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என வயது வித்தியாசம் இல்லாமல், போராடி வருகிறோம். இப்படிப் போராடுபவர்களைப் பயங்கரவாதிகள் என்கிறார்கள், அவர்கள். வெறும் கையோடு, வற்றிய வயிற்றோடு இங்குப் போராடும் மக்கள் குறித்து தமிழக மக்கள் அறிவார்கள். இது மண்ணைக் காக்கும் போராட்டம். எங்களின் கடைசி நபர் உள்ளவரை இந்தப் போராட்டம் தொடரும். எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை இந்த மண்ணில் செயல்படுத்த விடமாட்டோம். இது உறுதி” என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close