Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#Update - சென்னை பாரிமுனை கார் விபத்தில், ஒரு பெண் உயிரிழப்பு!

 

சென்னை பாரிமுனை அருகே அமைந்திருக்கும் பாலத்தில், டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. தடுப்பு சுவர்களை உடைத்துக்கொண்டு அந்த கார் கீழே விழுந்தது. இதையடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி அருகே இருக்கும் சுரங்கப்பாதையில் பதற்றமான சூழல் நிலவியது.

 

Car accident

 

இதனிடையே, விபத்துக்குள்ளான காரில் இரண்டு பெண்கள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். திடீரென்று ஏற்பட்ட இவ்விபத்தால் சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் ரெஸ்ரியா என்ற பெண் உயிரிழந்தார். இவர்கள் இலங்கையில் இருந்து, சென்னைக்கு சுற்றுலா வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close