Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலீடு எங்கிருந்து வந்தது? விஜயபாஸ்கரின் மனைவியிடம், ஐடி அதிகாரிகள் கிடுக்கிப்பிடி கேள்வி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, விசாரணைக்காக நேரில்  ஆஜரானார். அப்போது, கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு எங்கிருந்து வந்தது என்று சரமாரியாக அவரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

vijayabaskar

ஏப்ரல் 7-ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வீட்டில் இருந்த முக்கிய ஆவணத்தை அவரது கார் டிரைவர் எடுத்து ஓடியதோடு, ஆவணத்தை வெளியே வீசினார். அவரைப் பிடித்து சிஆர்பிஎப் படையினர் தடியால் சரமாரியாக அடித்தனர். அந்தச் சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் ஆகியோர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையின்போது, விஜயபாஸ்கரின் வீடுகளில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்கள்குறித்து ஏற்கெனவே விஜயபாஸ்கரிடம் வருமான வரித்துறையினர் மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளனர். அவரின் தந்தையும் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வருமானவரித்துறை நேற்று சம்மன் அனுப்பியது. ஆனால், ரம்யா நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர், இன்றுவரை காலஅவகாசம் கேட்டிருந்தார். இந்த நிலையில், இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா நேரில் ஆஜரானார். வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அப்போது, கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு எங்கிருந்து வந்தது என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close