Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்க்கரை ஆலை ரூ.2 லட்சம் பாக்கி; ரூ.1.5 லட்சம் கடன்- வேதனையில் விவசாயி தற்கொலை!

வறட்சியாலும், விளைவித்த பொருள்களுக்கு சரியான விலை கிடைக்காததாலும், தஞ்சை மாவட்ட விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

விவசாயி தற்கொலை

ஒரு காலத்தில், காவிரி டெல்டா மாவட்டங்கள் தண்ணீர் வளத்தில் செழித்தோங்கி இருந்தன.  தஞ்சாவூர்க்காரர்கள் என்று சொன்னாலே 'உங்களுக்கு என்ன குறைச்சல், நீங்க எல்லாம் உட்கார்ந்துக்கிட்டு காலாலேயே தண்ணீர் பாய்ச்சுவீங்க' என மற்ற பகுதி மக்கள் சொல்வதுண்டு. கர்நாடகம், காவிரிநீரைக் கபளீகரம் செய்யத் தொடங்கியதில் இருந்து, காவிரிச் சமவெளி வறண்ட பூமியாக மாற ஆரம்பித்தது. ஆனாலும், ஆங்காங்கே நிலத்தடி நீராவது ஓரளவுக்குக் கைகொடுத்து வந்தது. தற்போது அதுவும் கானல் நீராக மாறி வருகிறது. கடந்த ஆண்டு கர்நாடகம் கொஞ்சம்கூடத் தண்ணீர் தரவில்லை. ஆறுகளில் கொஞ்சம்கூட நீரோட்டம் இல்லாததால், வடகிழக்குப் பருவமழையும் கைவிட்டது. இதனால், நிலத்தடிநீரும் கானல் நீராக மாறியது. குடிநீருக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில்தான், போர்வெல்லை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள், பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துவருகிறார்கள். தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள அணைக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, செல்வராஜ். ஏழு ஏக்கரில் கரும்பு சாகுபடிசெய்து வந்தார்.  கடந்த ஆண்டு, தனது கரும்பை குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு விற்பனைசெய்தார். முழுப் பணமும் வரவில்லை. 2 லட்சம் ரூபாய் பாக்கியுள்ளது. இந்த நிலையில், இவரது போர்வெல்லில் தண்ணீரும் வரவில்லை. ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வாங்கி, 150 அடி ஆழத்தில் புதிதாக போர்வெல் அமைத்தார். அதிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் விரக்தி அடைந்த செல்வராஜ், நேற்று நள்ளிரவு தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close