Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவை: செவிலியர் சாவில் மர்மம் ; உறவினர்கள் போராட்டம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே  உள்ள முள்ளிக்கோரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர், சௌமியா. இவர் நர்சிங் படிப்பை முடித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன் இவர் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில், செவிலியராகப் பணிக்குச் சேர்ந்தார். கோவையில் விடுதி ஒன்றில் தங்கி பணிக்குச் சென்று வந்தார்.


இதையடுத்து, நேற்று முன்தினம் வழக்கம்போல பணி முடிந்து விடுதிக்குத் திரும்பியுள்ளார் சௌமியா. சற்று நேரத்தில், வெளியே சென்றிருந்த அவரின் தோழிகளும் விடுதிக்குத்  திரும்பியுள்ளனர். ஆனால், விடுதி அறை மூடப்பட்டு இருந்ததால், அவர்கள் ஜன்னல் வழியாக அறையைப் பார்த்துள்ளனர்.

Suicide


அங்கு, செளமியா தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். இதையடுத்து, போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சௌமியாவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குக்  கொண்டுசென்றனர். மேலும், சௌமியாவின் உறவினர்களும் கோவை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.


அப்போது, சௌமியாவின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவரது உடலை வாங்கிக்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close