Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பன்னீர்செல்வத்தின் சுற்றுப் பயணத்தால் யாருக்கு நன்மை?

உள்ளாட்சித் தேர்தல் தேதி நெருங்கியுள்ள வேளையில்,  ஆட்சிக்கு வருவதற்குக் காரணமாயிருந்த இரட்டை இலைச் சின்னத்தையே, ஆளுங்கட்சியான அ.தி.மு.க. இழந்து நிற்கிறது. அ.தி.மு.க. அம்மா அணி (சசிகலா), புரட்சித்தலைவி அம்மா அணி (ஓ.பி.எஸ்) என்று இரண்டாக உடைந்துபோய்க் கிடக்கிறது, அ.தி.மு.க. 

Panneerselvam


தமிழக அரசியல் வரலாற்றிலேயே இப்போதுதான், ஆளுங்கட்சிக்கு அதனுடைய சின்னம் கைவசம் இல்லை. இடைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையம் கொடுத்த 'இரட்டை மின்விளக்கு' சின்னமே, உள்ளாட்சித் தேர்தலுக்கும் கிடைத்தால் சரி என்றளவில், 'நீதி கேட்டு  பயணம்' போயிருக்கிறார், ஓ.பி.எஸ்.


கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர்  தினகரன் என்று சொல்லப்பட்டவர்கள், சிறைச்சாலையில் இருப்பதுபோல இரட்டை இலைச் சின்னமும் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சசிகலா ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, முதல்வராக ஆட்சியில் இருக்கிறார்.  ஆனால், சின்னம் கையில் இல்லை.


ஜெயலலிதாவால் இரண்டுமுறை முதல்வராக அறிவிக்கப்பட்ட ஓ.பி.எஸ், ஜெயலலிதா இறந்த பின்னும் சசிகலா ஆதரவுடன்  ஒருமுறை முதல்வராக அறிவிக்கப்பட்டார். அப்படிப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்திடமும் இரட்டை இலைச் சின்னம் இல்லை. இதே நிலைமை நீடித்தால் என்ன ஆகும்?

இப்போதுள்ள சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வின் இரு தரப்புக்கும் சுயேச்சை சின்னம்தான் ஒதுக்கப்படும். இரண்டு அணிகளும் பேச்சு வார்த்தையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குள் உள்ளாட்சித் தேர்தலே முடிந்துவிடக்கூடும். உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவு வாக்குகளை வாங்கிய அணிக்கு, இரட்டை இலைச் சின்னத்தைக் கொடுக்கலாம் என்று முடிவாகும். அதை மனதில் கொண்டுதான், ஓ.பன்னீர்செல்வம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close