Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டு வராதது ஏன்? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

'மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் இன்று மதியம் நேரில் ஆஜராக வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மருத்துவ முதுகலைப் படிப்பில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 50 சதவிகித இடஒதுக்கீடு, சமீபத்தில் ரத்துசெய்யப்பட்டது. இதை எதிர்த்து, 15 நாள்களாக மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 'மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால், ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர்' என்று வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு, இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, 'மருத்துவர்கள் போராட்டத்தால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவர்கள் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், இன்று மதியம் 2.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close