Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறைத்துறையினர், ஜனாதிபதியா... அமெரிக்க அதிபரா? விளாசிய உயர்நீதிமன்ற நீதிபதிகள்!

'நீதிமன்றத்துக்கு வராத சிறைத்துறையினர் ஜனாதிபதியா... அமெரிக்க அதிபரா?' என்று கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 'திருமுல்லைவாயில் ஆய்வாளர் ஆஜராகாவிடில், டிஜிபி ஆஜராக உத்தரவிட நேரிடும்' என்று எச்சரித்துள்ளனர்.

சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்புப் பகுதியில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பிரசன்னா உட்பட 21 பேரை காவல்துறையினர் கைதுசெய்து புழல் சிறையில் அடைந்தனர். இதனிடையே, பிரசன்னாவின் தாயார் இறந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்களில் கலந்துகொள்ள அவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்றும் புழல் சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு சிறைத்துறை சார்பில் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

இந்நிலையில், பிரசன்னா உள்பட 21 பேர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தனர். இந்த மனுக்களை மே 5-ஆம் தேதி (இன்று) விசாரிப்பதாகக் கூறிய நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர், பிரசன்னாவுக்கு மட்டும் ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டதோடு, மாலைக்குள் அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கூறினர். மேலும், திருமுல்லைவாயல் காவல்துறை ஆய்வாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவு வரவில்லை எனக் கூறி, பிரசன்னாவை ஜாமீனில் வெளியிட சிறைத்துறை நிர்வாகம் மறுத்துவிட்டதாக, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, பரோல் கேட்ட பிரசன்னாவை காலை 11.30 மணிக்குள் விடுவிக்க வேண்டும் என்றும், புழல் சிறை கண்காணிப்பாளர் காலை 11.30 மணிக்குள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், 'புழல் சிறை எஸ்.பி, ஆஜராகாவிடில், உள்துறைச் செயலாளர், டிஜிபி-யும் ஆஜராக நேரிடும்' என எச்சரித்தனர்.

மேலும், திருமுல்லைவாயில் ஆய்வாளர் ஆஜராகாவிடில், டிஜிபி ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்த நீதிபதிகள், 'நீதிமன்றத்துக்கு வராத சிறைத்துறையினர் ஜனாதிபதியா... அமெரிக்க அதிபரா? என்று கேள்வி எழுப்பியதோடு, டாஸ்மாக் போராட்டத்தில் கைதானவரை ஜாமீனில் விடாததால், இழப்பீடு வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.

இதனிடையே, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 21 பேர் மீதான எஃப்.ஐ.ஆரை ரத்துசெய்து உத்தரவிட்ட நீதிபதிகள், அனைவரையும் இன்று மாலைக்குள் விடுவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close