Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் 61 நாள்களாக அதிகரிப்பு!

மீன்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மீன் பிடி தடைக்காலம் 45 நாள்களில் இருந்து 61 நாள்களாக அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

மீனவர்கள்

ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தைப் பாதுகாக்க மீன்பிடி தடைக் காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மீனவர்கள் கடலுக்குள் செல்வதில்லை. இதற்கு நிவாரணத் தொகையாக தமிழக அரசு சார்பில் ரூபாய் 5000 மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் தொடங்கியது. ஏப்ரல் 15 முதல் மே இறுதி வரை 45 நாள்கள் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலத்தை மீன்பிடி சாதனங்களை சரி செய்யவும், படகுகளைப் பழுதுபார்க்கவும் மீனவர்கள் பயன்படுத்திவந்தனர்.

இந்நிலையில், மீன்பிடி தடைக் காலத்தை 61 நாள்களாக அதிகரிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,' தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட மீன்பிடி தடைக் காலம் 61 நாள்களாக அதிகரிக்கப்படுகிறது. மேலும் இந்தாண்டுக்குள் மீனவர்களுக்கான தாய் கப்பல் திட்டம் செயல்படுத்தப்படும்' என அறிவித்தார். மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் ரூபாய் 32 லட்சத்தில் நிரந்தர மீன் சந்தை அமைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close