Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘மதவெறி சக்திகளுக்கு எதிராக கைகோக்கத் தயார்!’ திருமாவளவனுக்கு ஜி.ராமகிருஷ்ணன் பதில்

மதவெறிக்கு எதிராகப் போராட திருமாவளவன் அழைப்பு

தவெறி சக்திகளிடம் இருந்து இந்திய தேசத்தைக் காப்பாற்றப் போராடும் அரசியல் கட்சிகளோடு கைகோக்க இடதுசாரிகள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து 2015-ல் மக்கள் நலக் கூட்டியக்கத்தை ஆரம்பித்தனர். மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். அதில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இந்தக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகியது. பிறகு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்ததைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகின. 

இந்த நிலையில், அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மே 4-ம் தேதி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், “மதவாத சக்திகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளுடன் இடதுசாரிகள் கைகோக்க வேண்டும்” என்றார்.

திருமாவளவனின் இந்த அழைப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டோம். முத்தரசன்

“திருமாவளவனின் கருத்து வரவேற்கத்தக்கது. ஆனால், இடதுசாரிகளாகிய நாங்கள் ஏற்கெனவே இதைச் செய்துகொண்டுதான் இருக்கிறோம்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம்.
தலித் மக்களோ, பழங்குடியினரோ, சிறுபான்மை மக்களோ, மதவெறி சக்திகளால் தாக்கப்படும்போது, அந்த மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கும். அதே நேரத்தில், இந்த மக்களை வகுப்புவாதிகள் தாக்கும்போது, இவர்களைப் பாதுகாக்க மதச்சார்ப்பற்ற கட்சிகளுடன் கூட்டு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்கும். மக்கள் பிரச்னைகளுக்காக ஏப்ரல் 25-ம் தேதி நடந்த பொதுவேலைநிறுத்தத்தில் நாங்கள் பங்கேற்றோம், இனியும் பங்கேற்போம். மதவெறியை எதிர்ப்பதற்கும், மதவெறியர்களின் தாக்குதலை எதிர்ப்பதற்கும், மதச்சார்பற்ற சக்திகளுடன் கைகோக்க மார்க்சிஸ்ட் கட்சி தயாராக இருக்கிறது. 

ஆனால், தேர்தல் உடன்பாடு என்பது வேறு. தேர்தலில், வகுப்புவாதப் பிரச்னை மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் தாராளமயம், தனியார்மயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் சேர்ந்து வருகின்றன. பொருளாதாரக் கொள்கைகளில் காங்கிரஸ் கட்சிக்கும், பி.ஜே.பி-க்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. உதாரணமாக, விவசாயிகளுக்கு சாகுபடிக்கு ஆகும் செலவில் ஒன்றரை சதவிகிதத்தை விளைபொருட்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரை. அந்த கமிஷனை அமைத்த காங்கிரஸ் கட்சியே அந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.எஸ்.சுவாமிநாதன் கமிஷனின் அந்தப் பரிந்துரையை ஏற்பதாக தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்த மோடி, தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, அதை ஏற்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

ஜி.ராமகிருஷ்ணன்தீண்டாமை, சாதிப்பாகுபாடு, ஆணவக்கொலை போன்ற சமூகப் பிரச்னைகளில் அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் அக்கறையோ, கவலையோ கிடையாது. அது மட்டுமல்லாமல், ஊழலிலும் இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு கிடையாது. வகுப்புவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றால், பண்பாட்டுத் தளத்தில், கருத்தியல் தளத்தில், தத்துவார்த்த  சித்தாந்தத் தளத்தில் என பல தளங்களில் அதை எதிர்க்க வேண்டும். அப்போதுதான் வகுப்புவாதத்தைத் தடுக்க முடியும். ஆனால், வகுப்புவாதத்தை எதிர்ப்பதற்கு அ.தி.மு.க., தி.மு.க போன்ற பிராந்திய கட்சிகள் தயாராக இருப்பதில்லை. 

திருப்பூரில் கடந்த ஆண்டு, பக்ரீத் பண்டிகை அன்று முழு அடைப்பு என பக்ரீத்துக்கு முந்தைய நாளில் இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. அதை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்ததுடன், உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அதற்கு காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வந்தன. அதையடுத்து, முழு அடைப்பை இந்து முன்னணி வாபஸ் வாங்கியது. இதுபோல, மதவாதத்தை, சாதியவாதத்தை எதிர்ப்பதில் மார்க்சிஸ்ட் கட்சி ஒத்துழைக்கும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close