Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை போலீஸ் கமிஷனராக நாங்கள் வரமுடியாதா ? ஐபிஎஸ் குமுறல்!

சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்கத் தகுதி நிர்ணயம் என்ன? என்ற கேள்விதான் கடந்த சில நாள்களாக ஐபிஎஸ் வட்டாரத்தில் சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கிறது.
   

திடீரென்று இப்படி ஒரு கேள்வி எழக் காரணம் என்ன? விசாரித்தபோது, 'அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் 'குட்-புக்' கில் இருந்ததால், மூன்றுமுறை சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் ஜார்ஜ். அப்போதே, கூடுதல் டிஜிபி-யில் இருந்து   டிஜிபி-யாக பதவி உயர்வு பெற்றார். ஆனால், கமிஷனர் பதவியிலேயே அவர் தொடர்ந்தார். 


'சென்னை போலீஸ் கமிஷனருக்கான தகுதி, கூடுதல் டிஜிபி அந்தஸ்துக்கு உட்பட்டது. ஜார்ஜ் கமிஷனராக இங்கே தொடர முடியாது' என்ற ஆரூடங்கள்  அப்போது சொல்லப்பட்டாலும், 'கிரேட்டர் சென்னை' க்கு இனி டிஜிபி. அந்தஸ்துதான் என்று ஜார்ஜ் தரப்பு பதிலடிகொடுத்தது.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது,  'சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவார். எனவே, அவரை மாற்ற வேண்டும்' என்று தேர்தல் ஆணையத்தில் தி.மு.க புகார் செய்தது.  ஆணைய நடவடிக்கையாக ஜார்ஜ் மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருந்த கரன்சின்ஹா நியமிக்கப்பட்டார்.


பொதுத் தேர்தலின்போதும் (2016) இதே போல ஜார்ஜை மாற்றக் கோரி, தி.மு.க., தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தது. அப்போது ஜார்ஜ் இடத்துக்கு நியமிக்கப்பட்டவர், கூடுதல் டிஜிபி-யாக இருந்த அசுதோஸ்சுக்லா. டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐந்து பேரில் ஒருவரைக்கூட சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கவில்லை.

Karan Sinha


இப்போது, காவல்துறை உயரதிகாரிகள் மத்தியில் புகைச்சலைக் கிளப்பிவிட்டிருக்கும் கேள்வி, 'சென்னை போலீஸ் கமிஷனராக இருக்க, கூடுதல் டிஜிபி தகுதியே போதுமா அல்லது டிஜிபி தகுதிதான் ஏற்கப்படுமா' என்பதுதான்.  

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close