Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த போலீஸ் டிஜிபி யார்? கவுன்ட்டவுண் தொடங்கியது.

மிகவும் சோதனையான காலகட்டத்தில் தமிழக ஐபிஎஸ். அதிகாரிகள் இருக்கிறார்கள். இதை இப்போது சொல்லாது போனால், எப்போதும் சொல்ல முடியாது. டிஜிபி அந்தஸ்து கிடைத்தும் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த முதல் ஐபிஎஸ்  அதிகாரி, டி.கே.ராஜேந்திரன். இரண்டாவதாக எஸ்.ஜார்ஜ். பணி ஓய்வு பெறுவதில்  ராஜேந்திரன் முன்னே, ஜார்ஜ் பின்னே என்று மாதக் கணக்கிலான ரேஸில்தான் இருவருமே இருக்கிறார்கள்.  


  சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே. ராஜேந்திரனின்  இருக்கை காலி செய்யப்பட்டுதான், அந்த இடம் எஸ். ஜார்ஜுக்கு கொடுக்கப் பட்டது. பணி ஓய்வுபெற்ற பின்னும் ஓராண்டு பணி நீட்டிப்பில் இருந்த டிஜிபி அசோக்குமார்,  கடந்த ஆண்டு செப்டம்பரில் விருப்ப ஓய்வில் வீட்டுக்குப்போனார். அசோக்குமார் இடத்துக்கு, டி.கே.ராஜேந்திரனை ஜெயலலிதா அரசு நியமித்தாலும்,  பொறுப்பு  டிஜிபி-யாக மட்டுமே பணியமர்த்தி வேடிக்கை காட்டியது. கூடவே உளவுத்துறையின் நிரந்தர டிஜிபி பொறுப்பையும் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தது.


 கூடுதல் டிஜிபி-யாக இருந்த ஜார்ஜுக்கு டிஜிபி அந்தஸ்து வந்ததும், அசோக்குமாரின் இருக்கை ஜார்ஜுக்குதான் என்று எழுந்த பேச்சு, அதன்பின் சைலன்ட் 'மோடு' க்குப் போனது.  முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஜார்ஜை திடீர் புறக்கணிப்புசெய்தது,  ஜார்ஜை  நேரில் ஆஜராகச் சொல்லி அடுத்தடுத்து சென்னை உயர்நீதிமன்றம்  குட்டியது எனப் பல அம்சங்கள் ஜார்ஜுக்கு மைனஸாகப்போனது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் ஜெயலலிதா மறைந்தார், ஜார்ஜும் தேர்தல் கமிஷனால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, இப்போது உள்துறையால் தீயணைப்புத்துறை டிஜிபி-யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். திரும்பவும் போலீஸ் கமிஷனர் அல்லது போலீஸ் டஜிபி என்ற கனவில் இருந்த ஜார்ஜ், தீயணைப்புத்துறைக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Geroge


'எஞ்சியுள்ள நான்குமாத பணிக் காலத்துக்குள் ஏதேனும் அதிசயம் நிகழாதா' என்ற எதிர்பார்ப்பில் ஜார்ஜ் இருக்கிறார்.பொறுப்பு டிஜிபி-யாகவே ஓராண்டுக்கும் மேலாக இருக்கும் டி.கே.ராஜேந்திரன்,  டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் கே. ராதாகிருஷ்ணன், கே.பி.மகேந்திரன் ஆகியோருக்கும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவிக்கான தகுதியும் உண்டு, கனவுகளும் உண்டு. அயலகப் பணியில் இருக்கும் அர்ச்சனா ராமசுந்தரத்துக்கும் அந்தக் கனவு இருக்கலாம். இவர்களில் யார் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் அடுத்த இரண்டாண்டுக்கு பணி நீட்டிப்புடன் பதவியைத் தொடரமுடியும்...


பொறுப்பு முதல்வர், பொறுப்பு கவர்னர் பதவி போல காவல்துறையிலும் பொறுப்பு கமிஷனர், பொறுப்பு டிஜிபி போன்ற பதவிகள் வைத்திருப்பது, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு நல்லதல்ல என்று சொல்லிவைப்பது நல்லது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close