Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம்' - அலறிய போன்... அலர்ட்டான போலீஸ்!

kushboo

நடிகை குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. நடிகை குஷ்பு, தனது குடும்பத்துடன் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வசித்துவருகிறார்.

 

நேற்று இரவு தேனாம்பேட்டைப் பிரிவு 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு மர்ம போன்கால் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர், 'நடிகை குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம்' என்றாராம். இந்த மிரட்டல் போன்கால் குறித்து உடனடியாக போலீஸாருக்குத் தகவல்கொடுக்கப்பட்டது. உஷாரான காவல்துறையினர், நள்ளிரவு குஷ்புவின் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்றனர்.

அங்கு நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. மேற்கொண்டு, போன் செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. குஷ்பு தற்போது நடிப்பு மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிப்புப் பணிகளைக் கவனித்துவருகிறார். மேலும், காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பிலும் செயலாற்றிவருகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close