Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சசிகலா புஷ்பா எங்கு சென்றாலும் இனி இவர்களும் பின் தொடர்வார்கள்!

'அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு, 24 மணி நேரமும் முழு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சசிகலா புஷ்பாவின் அலுவலகம் நேற்று வெளியிட்டது.

அ.தி.மு.க.வில்  இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா, 'தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு இல்லை' என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, சசிகலா புஷ்பா டெல்லியில் தங்கியிருக்கும்போது அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க, டெல்லி போலீஸுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சசிகலா புஷ்பா வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.

Sasikala Pushpa
 

இந்த நிலையில், தமிழகத்தில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சசிகலா புஷ்பா தரப்பில் மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. நேற்று, டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை, நீதிபதி அஷுடோஷ் பின்வரும் உத்தரவைப் பிறப்பித்தார்.  'சசிகலா புஷ்பாவுக்கு துப்பாக்கி ஏந்திய இரு தனிப் பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும். டெல்லி காவல்துறையின் ரோந்து வாகனத்தை அவரின் வீட்டு முன்பு நிறுத்த வேண்டும். டெல்லி மட்டுமன்றி, பிற மாநிலங்களுக்கு சசிகலா புஷ்பா சென்றாலும் அங்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்',  என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close