Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வறட்சியின் பிடியில் கால்நடைகள், கண்டுகொள்ளுமா அரசு...

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள மேய்ச்சல் நிலங்கள் வறண்டு போனதால் புல் இன்றி கால்நடைகள் காய்ந்த குச்சிகளை உண்டு உயிர்வாழ்ந்து வருகின்றன.

மானாமதுரை

மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள் மேய்ச்சல் நிலத்துக்கு பெயர்போனவை. வைகை ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள இந்தப் பகுதி கால்நடைகளின் மேய்ச்சலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. இதனிடையே பருவமழை பொய்த்துப் போனதாலும், வறட்சியின் காரணமாகவும் கால்நடைகளுக்கு பச்சை புல் கூட கிடைக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மானாமதுரை கிராமவாசி ஒருவர் கூறுகையில்,' மானாமதுரையில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்சாலை அருகேயுள்ள மேய்ச்சல் நிலங்கள் நீரின்றி வறண்டு விட்டன. இதனால் ஆடு மாடுகளுக்கு பசும்புல் இல்லாததால், காய்ந்த குச்சிகளையும், புற்களையும் உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளின் நீர் தேவைக்குப் பயன்படுத்தபட்ட சிறுக் குட்டைகள் எல்லாம் வறண்டுவிட்டதால், இப்பகுதியில் உள்ள கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது' எனக் கூறினார். வறட்சியின் காரணமாக விவசாயிகள் மட்டுமன்றி விவசாயத்தின் வாழ்வாதாரமான கால்நடைகள் அழியும் நிலையில் அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அந்த ஏழை விவசாயி.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close