Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அரசு இந்தியை திணிக்கிறது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

நாடு முழுவதும் இந்தியை திணிப்பதற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் முயற்சி செய்து வருகிறது என்று தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின்



மத்திய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் இந்தி திணிப்பு குறித்தும் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும் விவரிக்கப்பட்டது. வேலூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், 'இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கைகள் இந்தியில் மட்டுமே வெளியிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. புதிய ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எழுத்து அச்சடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் இந்தி தெரிந்திருக்கும் பட்சத்தில் கட்டாயமாக இந்தி பேச வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆசிரியர் தினத்தை 'குரு உட்சவ்' என்ற பெயரில் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வங்கி ஸ்லிப்கள், மொபைல் போன்களில் வரும் அரசு தொடர்பான குறுஞ்செய்திகள் ஆகியவை இந்தியில் உள்ளன.

அனைத்துப் பல்கலைக்கழகங்களில் இந்தியை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இந்தி பேசாத மாநிலங்களிலே உள்ள மத்திய அரசின் பள்ளிகளில் இந்தியை 10-ம் வகுப்புவரை கட்டாயமாக்கியுள்ளது. இந்தியை ஐ.நா சபையின் ஆட்சி மொழியாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. மத்திய அரசு எல்லா வழிகளிலும் இந்தியை திணித்து வருகிறது. இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தித் திணிப்பை தான் எதிர்க்கிறோம்' என்றார்.  

படம் : ச.வெங்கடேசன்
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close