Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிமோட் சசிகலா, ரிங் மாஸ்டர் தினகரன் ! அடுத்தது என்ன ? அலறும் தொண்டர்கள்...

ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையில் சட்டசபையிலும், பொது வெளியிலும் தி.மு.க.வை வறுத்தெடுத்த அ.தி.மு.க., ஜெயலலிதா மறைவுக்குப் பின் அந்தப் போக்கைக் குறைத்துக் கொண்டது. முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வமும், தி.மு.க.வின் செயல்தலைவரான  மு.க.ஸ்டாலினும் சட்டசபையில் சிரித்துப் பேச பழகிக் கொண்டனர். 

Sasikala, Dinakaran


ஓ.பி.எஸ். கையில் இருந்த முதல்வர் பதவியை பிடுங்கும் வரையில் இந்த 'சிரிப்பு' குறித்து சசிகலா ஏதும் பேசவில்லை.  சமாதி தியானத்தை ஓ.பி.எஸ். மேற்கொண்ட போதுதான் ஸ்டாலின் - ஓ.பி.எஸ். சேர்ந்து சிரித்ததை சசிகலா விமர்சித்தார்.  


நள்ளிரவுப் பேட்டியில், "என்ன செய்கிறார் அந்த ஓ.பி.எஸ்.? ஸ்டாலினுடன் சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும்..." என்று அனல் கக்கினார். "மனித இனத்துக்குத்தான் சிரிக்கத் தெரியும்" என்று ஓ.பி.எஸ். பதிலடி கொடுத்தார். "அம்மா உயிரோடு இருக்கும் போது அப்படி சிரித்திருக்கலாமே, ஓ.பி.எஸ். அப்போது மட்டும் நீங்கள் மிருகமாக இருந்தீர்களா?" என்று அ.தி.மு.க. இணையதளத்தில் கேள்வி எழுப்பினர். 


'ஜெயலலிதா இருந்த போது  தி.மு.க.வை ஜென்ம விரோதியாகவே கருதினார், அதேநிலையை இப்போதும் தொடர்ந்தால் தான் கட்சி நிலைக்கும், அதைத்தான் அடிமட்டத் தொண்டனும்  விரும்புவான்' என்பதே சசிகலாவின் நிலைப்பாடு. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது டி.டி.வி. தினகரனும், "தி.மு.க. தான் எங்கள் எதிர்க்கட்சி, கருணாநிதிதான் எங்கள் ஜென்ம எதிரி" என்றார். 


ஆக,  தி.மு.க.வை எதிர்த்துப் பேசினால்தான் கட்சி நிலைக்கும் என்ற முடிவில் சசிகலாவும், தினகரனும் உறுதி காட்டுகின்றனர். தொண்டர்களை சந்தித்து நியாயம் கேட்கப் போவதாக ஓ.பி.எஸ். கிளம்பியுள்ள வேளையில்,முதல்வர் பழனிசாமியும் , அறிக்கை மூலம் களமிறங்கி விட்டார்.


 "நேர்மை, ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை, ஆட்சியிலும் கருணாநிதி கடைப்பிடிக்க வேண்டும் என, எம்.ஜி.ஆர்., வலியுறுத்தி உள்ளார் " என்ற அவர் அறிக்கை, அரசு இணையதளத்தில், 'ஹைலைட்' செய்யப் பட்டுள்ளது. எதிர்பார்த்தது போலவே தி.மு.க., இந்த அறிக்கைக்கு கொதிக்க ஆரம்பித்திருக்கிறது.


ஆட்சியில் உள்ள சசிகலா ஆதரவு அ.தி.மு.க. தான் தி.மு.க.வை ஜெ.போலவே எதிர்க்கிறது என்று காட்டும் வேலைகளில் இதுவும் ஒன்று... ஏற்கெனவே ஓ.பி.எஸ்.-ஸ்டாலினுடன் கூட்டு என்று கொளுத்திப் போட்டதும் இதன் ஒரு நிலைதான்.  மொத்தத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை தனிமைப் படுத்த  காயை சிறையில் இருந்தபடியே  நகர்த்தத் தொடங்கியுள்ளனர் சசிகலாவும், தினகரனும் ! அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற திக் திக் மனநிலையில் இருப்பது மட்டும் தொண்டர்களே !

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close