Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

லாரி மூலம் குடிநீருக்கு முன்பதிவு ! நாளைமுதல் நடைமுறைக்கு வருகிறது

குடிநீர்ப்பஞ்சம் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டே வருகிற வேளையில் கிடைக்கும் கொஞ்ச குடிநீரும் அடித்தட்டு மக்களுக்கு கிடைப்பதில்லை என்ற புகார் சொல்லப் பட்டது. பெருவணிக நிறுவனங்கள், நட்சத்திர ஹோட்டல்களுக்கு வழங்கியது போக எஞ்சியதே மக்களுக்கு கிடைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன. நகர்ப்புறங்களில் மனிதர்களும், கிராமப் புறங்களில் கால்நடைகளும், பறவைகளும் நீராதாரம் இல்லாமல் செத்துக் கொண்டிருப்பதும் தொடர்கதையாகி வருகிறது.


இந்நிலையில்தான், 'லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்பும் பொது மக்கள்  இணைய வழி முன்பதிவு மற்றும் ஒரு முகப்படுத்தப்பட்ட முன்பதிவு மூலமாகவும்,  தேவையான குடிநீரை   முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்' என்று குடிநீர்வாரியம் அறிவித்துள்ளது.


பொதுமக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள நீர் நிரப்பு மையங்களில் முன்பதிவு  செய்து, இதுவரை குடிநீரைப் பெற்று வந்தனர். இப்போது அந்த நடைமுறை  இன்னும்  எளிமையாக்கப் பட்டிருக்கிறது.


 www.chennaimetrowater.com  என்ற வலை தளத்தில்  குடிநீர் தேவையை முன்பதிவு செய்து பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். முன்பதிவு செய்பவர்களுக்கு  எஸ்.எம்.எஸ். மூலமாக முன்பதிவை உறுதிப்படுத்தும் தகவல் அனுப்பப்படும். இதில் நடைமுறைச் சிக்கல் இருந்தால், அதையும் புகாராக  இணைய தளம் மூலம்  தெரிவிக்கலாம். 


பகுதியில் உள்ள  நீர்நிரப்பு மையங்களில் முன்பதிவு செய்வதற்கு பதிலாக 45674567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் ஒரு முகப்படுத்தப்பட்ட முன்பதிவு வசதியை பயன்படுத்தி லாரிகள் மூலம் குடிநீர் பெறலாம்.


மே, மாதம் 8-ம் (நாளை) தேதி முதல் இந்த சேவை நடைமுறைக்கு வருகிறது.  முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு  முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் வழங்கப்படும். அதே போல் தற்போது உள்ள நீர்நிரப்பு மையங்களில் தொலைபேசி மூலம் பதிவு செய்யும் முந்தைய நடைமுறையும் தொடர்ந்து இருக்குமாம்...

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

வெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி! ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்! #MustRead #MondayMotivation
Advertisement

MUST READ

Advertisement
[X] Close