Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை சித்திரைத் திருவிழா கொண்டாட்டம் : மீனாட்சி அம்மன்-சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், சுந்தரேஸ்வர்-மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு ஏராளமாண பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

மீனாட்சி திருமணம்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! போட்டோ ஆல்பத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்


மதுரையில் சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. நேற்று இரவு மீனாட்சி அம்மன் தனது பரிவாரங்களுடன் மாசி வீதிகளில் வலம் வந்தார். திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்சியான மீனாட்சி அம்மன்-சுந்தரேஷ்வர் திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. 

இதற்காக மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு - வடக்கு ஆடி வீதியில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 15 லட்ச ரூபாய் செலவில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, திருகல்யாணத்தின் போது மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுக்க திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய் பெருமாளும் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர். மாசி வீதிகளில் வலம் வந்த சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் திருக்கல்யாண மண்டபம் வந்தடைந்ததும் இருவருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்! போட்டோ ஆல்பத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

அப்போது சித்திரை வீதிகளில் குடியிருந்த பெண்கள், மீனாட்சி அம்மனை வழிபட்டு புது தாலி அணிந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் கட்டிய தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண நிகழ்வுகளை பக்தர்கள் காண வசதியாக சித்திரை வீதி, ஆடி, ஆவணி வீதிகளில் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அதிக அளவில் வைக்கப்பட்டு இருந்தது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக 500 ரூபாய் டிக்கெட்டுக்கான தனிவழியும் 200 ரூபாய் டிக்கெட்டுக்கான தனி வழியும் இலவசமாக காண வருபவர்கள் செல்ல தனி வழியும் அமைக்கப்பட்டு இருந்தது. 

மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அவர்கள் திருக்கல்யாணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. திருமணம் முடிந்த பிறகு விருந்து நடைபெறும். சுமார் ஒரு லட்சம் பேர் வரை சாப்பிடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விருந்து உண்டவர்கள் உறவினர்கள் திருமணத்திற்கு மொய் செய்வது போல இந்த திருக்கல்யாணத்திற்கும் மொய் செய்வார்கள். இதனைத்தொடர்ந்து  இன்று இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி 4 மாசி வீதிகளிலும் வலம் வருகின்றனர். நாளை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மேலும் 10-ம் தேதி அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. 

படங்கள் - வி.சதீஸ் குமார்

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close