Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்குவதாக மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

mbbs

தமிழகத்தில் உள்ள மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களை நிரப்ப கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. முதல் கட்டமாக நாளை சிறப்பு பிரிவினர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. இதையடுத்து நாளை மறுநாள் அரசு கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைபெறுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இக்கலந்தாய்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு மே 9 முதல் 11 வரை நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 562 இடங்களுக்கான எம்.டி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இக்கலந்தாய்வு மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதனிடையே எம்.டி, எம்.டி.எஸ் படிப்புகளுக்காக கூடுதலாக 305 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close