Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் - சகாயம் ஐ.ஏ.எஸ் வேண்டுகோள்..

மணற் குவாரிகளைப் போல. கிரானைட் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள புதுக்குளத்தை 'மக்கள் பாதை' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுத்தம் செய்தனர். அவர்கள் குளத்தில் இருந்த கழிவு மற்றும் குப்பைகளை அகற்றினர். குளத்தில் தேவையில்லாமல் வளர்ந்திருந்த செடிகளையும் அகற்றினர். இந்தப் பணியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அந்த இடத்திற்கு வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மணல் குவாரிகளை அரசுடைமை ஆக்குவது வரவேற்கத்தக்கது. அதேபோல கிரானைட் குவாரிகளையும் அரசுடைமை ஆக்கவேண்டும். சுடுகாட்டில் தூங்குவதை விட சுதந்திர நாட்டில் தூங்குவதற்கு பயமாக உள்ளது' என்றார். மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பான ஆய்வின் போது சகாயம் ஐ.ஏ.எஸ் சுடுகாட்டில் படுத்து உறங்கியது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close