Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#நீட் தேர்வு: கடினமான கேள்விகள்.. கடும் கட்டுப்பாடுகள்.. கடுப்பான மாணவர்கள்!

இன்று நடைபெற்ற நீட் தேர்வு கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் கூறியுள்ளனர். கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

நீட்

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 104 நகரங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 88 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதினர். இன்று நடைபெற்ற தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வு கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே தேர்வுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும் மாணவர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்வெழுத முழுக்கை சட்டையுடன் அனுமதியில்லை என கூறப்பட்டதால், மாணவர்கள் சட்டையின் கைப்பகுதியை கிழித்துக்கொண்டு தேர்வெழுத சென்றனர். மேலும், மாணவிகளுக்கும் கம்மல், கொலுசு, ஹேர்பின் உள்ளிட்டவைகளை அனிந்து வர அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே தருமபுரியில் 5 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் 3 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து மாணவர்களும் பெற்றோர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறை அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தேர்வெழுத முடியாத 3 மாணவர்களும் கண்ணீருடன் வீடு திரும்பினர்.  
 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close