Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஶ்ரீரங்கத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக பொங்கிய பொதுமக்கள்!

ஶ்ரீரங்கத்தில் புதிதாக அமையவிருந்த டாஸ்மாக் கடைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினரும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

டாஸ்மாக்

திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஆன்மிக யாத்திரைகள் செல்பவர்கள் தங்கி செல்வதற்காக அமைக்கப்பட்ட 'யாத்திரிகா நிவாஸ் ' அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க திட்டமிடப்பட்டது. இதனைக்கண்டித்து சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள், அங்கு டாஸ்மாக் கடை அமைக்கப்படாது என உறுதியளித்தனர்.

இந்நிலையில் மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை அமைக்க கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனிடையே, டாஸ்மாக் கடை என்று அறிவிக்கப்படாமல் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால், ஶ்ரீரங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close