Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேற்று ரஜினி; இன்று மு.க.ஸ்டாலினுடன் நக்மா சந்திப்பு!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை, மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா இன்று சந்தித்துப் பேசினார்.

மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா நேற்று சென்னை போயஸ் கார்டனுக்கு திடீர் வருகை வந்தார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த்தை ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும். அவர் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவார் என்று அதிரடியை கிளப்பினார்.

இதனிடையே, சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று நக்மா வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, துரைமுருகன் உட்பட திமுக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, "தமிழக அரசு மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும். ஆனால், மக்களுக்கு அரசு நல்லது செய்யவில்லை. அதிமுக இரண்டு அணியினரும் சின்னத்துக்காக நாடமாடுகிறார்கள். குடிநீர் பிரச்னை, நீட் பிரச்னை என அனைத்தையும் விட்டுவிட்டு தமிழக அரசு நாடகமாடிக்கொண்டிருக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close