Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை மாநகரமா... மாநரகமா? முன்னாள் மேயர் ஆதங்கம்

தூய்மை நகரங்களின் பட்டியலில், சென்னை மாநகரம் 235-வது இடத்தைப் பிடித்துள்ளதற்கு மாநகராட்சியைக் கடுமையாக விமர்சித்துள்ளார், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.

தூய்மை இந்தியா திட்டத்தில், சிறந்த தூய்மையான நகரங்களின் தர வரிசைப் பட்டியலை,  4ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. இதில், முதலிடத்தில் இந்தூரும், ஆறாம் இடத்தில் திருச்சியும் இடம் பிடித்துள்ளன. அதேநேரத்தில், சென்னை மாநகரம் 235-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, மூன்றாவது இடத்தில் இருந்த திருச்சியும் பின்தங்கியுள்ளது. மிகவும் மோசமான, தூய்மை குறைந்த நகரமாக, உத்தரப்பிரதேசத்தின் ’கொண்டா’ நகரம் பட்டியலின் கடைசி இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், சென்னை மாநகரம் தூய்மையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு முன்னாள் மேயரும் தி.மு.க எம்எல்ஏ-வுமான மா.சுப்பிரமணியன் கடும் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'தூய்மை நகரங்கள் பட்டியலில், 235-வது இடம் பிடித்த சென்னை, மாநகரமா... மாநரகமா? என கேள்வி எழுப்பியுள்ளதோடு, தினசரி சேரும் 4000 டன் குப்பைகளை அகற்றாவிடில், சென்னை மாநகரம் நரகமாக மாறும் என்றும், மாநகரத் தூய்மை, நகர மேம்பாட்டில் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close