Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் மீண்டும் ஆஜர்!

வருமானவரித்துறை அலுவலகத்தில் சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் மீண்டும் ஆஜராகியுள்ளார்.

Sarathkumar

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சரத்குமார் ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் கடந்த மாதம் 7-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்குச் சொந்தமான ரேடான் மீடியா நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போதே, சரத்குமாரின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். இந்நிலையில், நடிகை ராதிகாவுக்கும், சரத்குமாருக்கும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது வருமான வரித்துறை. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் சரத்குமார் மற்றும் ராதிகா வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில், சரத்குமார் இன்று ஆஜரானார். வருமானவரித்துறை அலுவலகத்தில் சரத்குமார் ஆஜராவது இது மூன்றாவது முறையாகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close