Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்களை ஜெ. ஆன்மா மன்னிக்காது!" செல்லூர் ராஜு அதிரடி!

செல்லூர் ராஜு

''தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்களை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது'' என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மதுரை வைகை அணையை தெர்மாகோல் போட்டு மூட முயற்சி செய்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகி இருப்பவர்  தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு. நெல்லைக்கு இன்று வருகை தந்த அவர் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள், அம்மா மருந்தகங்களை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்தார்.

"தமிழகத்தில் தற்போது சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அம்மாவின் ஆட்சி. இந்த ஆட்சியைக் கலைக்க நினைப்பவர்களை அவரது ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது. கடந்த ஆண்டு தேர்தலின் போது, ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை எல்லாம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தற்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த அரசு தொடர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாக இணைய வேண்டும் என்று முதல்வர் ஏற்கெனவே அழைப்பு விடுத்து இருக்கிறார். அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அதனை ஏற்று பேசுவதற்கு, நாங்கள் திறந்தமனதுடன் தயாராக இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வத்துடன் 12 அமைச்சர்கள் தொடர்பில் இருப்பதாக செம்மலை தெரிவித்து இருப்பது தவறானது. 

எங்களுக்குள் ஏற்பட்டு இருப்பது கருத்து வேறுபாடு மட்டுமே. அ.தி.மு.க-வில் இப்போது ஏற்பட்டுள்ள நிலைமை அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்படும் சண்டையைப் போன்றது. நாங்கள் சீக்கிரத்திலேயே இணைந்து விடுவோம். ஆனால், ஊடகங்கள் எங்களைப் பிரிக்க முயற்சிக்காமல், ஒன்று சேர்க்கும் பணியில் செயல்பட வேண்டும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எப்போதும் மக்கள் நலனுக்காக பாடுபடக்கூடிய கட்சி” என்றார்.

அமைச்சர் செல்லூர் ராஜு நெல்லைக்கு வருவதை அறிந்ததும் அவரது கருத்தையும், செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள பத்திரிகையாளர்களுடன் திரளான பொதுமக்களும் ஆர்வத்துடன் கூடினார்கள். தெர்மாகோல் போன்று ஏதேனும் வித்தியாசமாக செய்வார் என்ற எதிர்பார்ப்பில், அவரது நடவடிக்கைகளைக் காண மக்கள் தீவிர ஆர்வம் காட்டினர். 

ஒருவேளை அவர் "தாமிரபரணி ஆற்றை தார்ப்பாய் போட்டு மூடி ஆவியாவதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பார்" என மக்கள் நினைத்து இருப்பார்களோ?!


படம்: எல்.ராஜேந்திரன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close