Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஜெயலலிதா உயில் என்னிடம்தான் உள்ளது' : தீபக் பரபர தகவல்..!


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்துவருகின்றன. அ.தி.மு.க, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாகப் பிரிந்தது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஒரு பேரவை துவங்கி தனி வழியில் சென்றார். தீபாவின் சகோதரர் தீபக், சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்துவந்தார்.

Deepak


ஆனால், சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, அவர் தினகரனுக்கு எதிராக குரல்கொடுத்தார். பிறகு, பன்னீர்செல்வம், சசிகலா அணியில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், தீபக்கின் புதிய கருத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து தீபக் கூறுகையில், "என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும் என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன.


அதன்படி, சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்குச் சொந்தம்" என்று கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close