Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்களிடம் வந்தால்... பன்னீர்செல்வம் அணியினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க அழைப்பு!

பன்னீர்செல்வம் அணியினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

சசிகலாவும் டி.டி.வி.தினகரனும் சிறைக்குச் சென்ற பின்னர், இருவரையும் கட்சியிலிருந்து தள்ளிவைத்தது முதல்வர் பழனிசாமி அணி. இதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் அணியை கட்சியுடன் இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுவருகிறது. பன்னீர்செல்வம் அணியின் இரண்டு நிபந்தனையால் பேச்சுவார்த்தை நடப்பதில் முட்டுக்கட்டை நிலவிவருகிறது. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம் என்று பழனிசாமி அணியினர் கூறிவந்தநிலையில், பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார். இதனால், இருஅணியினரும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செம்மலை எம்எல்ஏ, 12 அமைச்சர்கள், 35 எம்எல்ஏ-க்கள் எங்கள் அணிக்கு வரத் தயாராக இருப்பதாகக் கூறி அதிரடியைக் கிளப்பினார்.

இந்த நிலையில், சித்திரை முழுநிலவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள கண்ணகி சிலைக்கு தமிழக அமைச்சர்கள் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், '2021 வரை ஜெயலலிதா வழியிலான ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்' என்று கூறியதோடு, பன்னீர்செல்வம் அணியிலிருந்து வருபவர்களுக்கு கட்சியும் அரசும் உரிய முக்கியத்துவம் அளிக்கும் என்று அழைப்பு விடுத்தார்.

மேலும், 'தமிழகத்தில் ஊழல் அறிமுகம் செய்யப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான்' என்று குற்றம்சாட்டிய அமைச்சர் ஜெயக்குமார், 'தமிழக அரசு மீதான மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close