Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு! மருத்துவர்கள் சங்கம் அதிர்ச்சித் தகவல்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

நீட்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. கடுமையான கட்டுப்பாடுகள், கடினமாக வினாக்கள் என நீட் தேர்வுக்கு எதிராக பலதரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழகத்தின் மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதனிடையே நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ரவீந்திரநாத், ''இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் சென்ற ஞாயிறு அன்று நடத்தப்பட்டது. இந்தி, ஆங்கிலம், தமிழ், வங்கமொழி உள்ளிட்ட  10 மொழிகளில் நடத்தப்பட்டது. இதில் 180 வினாக்கள் இடம் பெற்றன. நாடு முழுவதும் ஒரே தேர்வு. அத்தேர்வின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தரப்பட்டியல் தயாரிக்கப்படும். அவ்வாறு இருக்கும் பொழுது வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு வினாக்கள் இடம் பெற்றுள்ளன. இது பாரபட்சப் போக்கை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

குஜராத்தி மொழியில் நடைபெற்ற தேர்வில் வினாத்தாள் எளிமையாக இருந்ததாகவும், வங்கமொழி வினாத்தாள் கடினமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலும் ஆங்கில மொழி வினாத்தாளைவிட தமிழ் மொழியில் அமைந்த வினாத்தாள் எளிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். மீண்டும், நாடு முழுவதும் ஒரே வினாத்தாளை, அதாவது 180 வினாக்களும் ஒன்றாக இருக்கும் வகையில் வினாத்தாளை அமைத்து மறுதேர்வை அனைத்து மொழிகளிலும் நடத்திட வேண்டும்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில், கணினியில் உள்ள வினாக்களை திருடி  ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தொடர்புடைய 3 பேரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. ஆனால், இது குறித்து எந்தவித மேல் நடவடிக்கையையும் எடுக்க மத்திய அரசு தயங்குகிறது. எனவே, இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.

முதுநிலை மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வை பல நாள்களுக்கு, வெவ்வேறு வினாத்தாள்களை பயன்படுத்தி, ஆன்லைன் மூலம் நடத்துவதை கைவிட வேண்டும். கோடிங் ஷீட் மூலம், நாடு முழுவதும் ஒரேநாளில், ஒரே வினாத்தாளை பயன்படுத்தி தேர்வுகளை நடத்திட வேண்டும்" என்று கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close