Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்கப்போவதாக அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 


பொறியியல் பல்கலைக்கழகங்களுக்கான தாய் பல்கலைக்கழகமாக அண்ணாப் பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் பொறியியல் கல்விக்கான கலந்தாய்வை அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்தப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலம் கடந்த மே மாதத்திலேயே முடிவடைந்த நிலையில் இன்னமும் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது பொறியியல் கலந்தாய்வுப் பணிகளை புறக்கணிக்கப்போவதாக அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். ஏழு ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பேராசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், துணைவேந்தர் இல்லாமல் பட்டமளிப்பு நடைபெறும் பட்சத்தில் பட்டமளிப்பு விழாவையும் புறக்கணிப்போம் என்றும் அறிவித்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு வளாகங்களையும் சேர்த்து மொத்தம் 1,100 பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த கூட்டமைப்பில் மட்டும் 450 பேராசிரியர்கள் வரை உள்ளனர். இவர்கள் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் பட்சத்தில் பொறியியல் கலந்தாய்வு பணியில் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close