Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதல் திருநங்கை பட்டதாரிக்கு வழங்கப்பட்ட கவுரவம்!

இந்தியாவில் முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியாகி சாதனைப் படைத்துள்ள கிரேஸ் பானுவுக்கு இளம் சாதனை திருநங்கை விருது வழங்கப்பட்டுள்ளது.

கிரேஸ்

விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் இந்தியா மற்றும் உலகம் முழுவதில் இருந்தும் பல திருநங்கைகள் கலந்துகொண்டனர். இதையடுத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், மிஸ் கூவாகம் அழகிப் போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே இளம் சாதனை திருநங்கை விருது, முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியான கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருநங்கைகளுக்கு ஆதரவான போராட்டங்களிலும், சமூக அநீதிக்கு எதிரான போராட்டங்களிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் கிரேஸ் பானு. இந்த விருது குறித்து அவர் கூறுகையில், 'என் சமூகமே என்னை ஊக்குவித்து இந்த விருதை வழங்கியது மாபெரும் அங்கீகாரமாகக் கருதுகிறேன் . பல்வேறு தீண்டாமை கொடுமைகளுக்கு ஆட்பட்டு, ஒடுக்குதலை அனுபவித்து உயிர் நீத்த என் மூத்த திருநங்கைகளுக்கு என் விருதினை சமர்பிக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close