Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோடை விடுமுறையிலும் கோர்ட்... பிரதமரின் பாராட்டு!

'கோடை விடுமுறையிலும் பணியாற்ற முடிவெடுத்துள்ள உச்சநீதிமன்றத்தின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்' என்று தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

விசாரணை முடிக்கப்படாத நிலையில், இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உச்சநீதிமன்றம் அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதன்படி, 'கோடை விடுமுறைக் காலங்களிலும் இனி உச்சநீதிமன்றம் பணியாற்றும்' என்ற நல்லெண்ண முடிவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் அறிவித்திருந்தார். மேலும், நாடு முழுக்க உள்ள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற 'ஒருங்கிணைந்த வழக்கு நிர்வாகத் தகவல் திட்டத்தை'த் தொடங்கிவைத்துப் பேசிய மோடி, 'கோடை விடுமுறையிலும் பணியாற்றுவோம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்து செயல்படுத்திவரும் உச்ச நீதிமன்றத்துக்கு என் பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய முயற்சி, மக்களிடையே பொறுப்பு உணர்ச்சியை ஏற்படுத்தும்' என்று புகழ்ந்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close