Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க-வை அழைக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் பகீர் காரணம்

சென்னையில் ஜுன் 3ஆம் தேதி நடைபெற உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வைரவிழாவுக்கு பா.ஜ.க-வை அழைக்காதது ஏன் என்பதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஜுன் 3ஆம் தேதி வைர விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பஞ்சாப், மேற்குவங்கம், பீகார், கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநில முதல்வர்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு தி.மு.க அழைப்புக்கடிதம் அனுப்பவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் நேற்று பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை, மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் நாகரிகம் தெரியவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நீர்நிலைகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த குளத்தைத் தூர்வாறும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க ஆட்சிக்காலத்தில் தண்ணீர் பிரச்னை இருந்தபோதிலும் சமாளிக்க பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து அ.தி.மு.க அரசு கவலைப்படவில்லை. ஊழல் செய்வதில்தான் ஆட்சியாளர்களின் கவனமுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

வைரவிழா தொடர்பாகத் தமிழிசை கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தமிழிசையின் கருத்துகளுக்குப் பதில் கூறி எனது மாண்பை குறைத்துக்கொள்ளவிரும்பவில்லை. திராவிட கட்சிகளை அழிக்க நினைக்கும் பா.ஜ.க-வை எப்படி வைர விழாவுக்கு அழைப்பது என்று வினா எழுப்பினார்.

இதனிடையே, நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வைரவிழா கருணாநிதிக்காக நடக்காமல் அரசியல் ஆதாயத்துக்காக நடத்தப்படுகிறது என்றும், கருணாநிதி சட்டமன்ற வைர விழாவில் பா.ஜ.க நிச்சயம் கலந்துகொள்ளாது என்றும் கூறினார்.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close