Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமைச்சர் விஜயபாஸ்கர் நண்பரின் கடிதம் சிக்கியது! அதிர்ச்சித் தகவல்

அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும்  நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன்,  தற்கொலை செய்துகொள்வதற்கு முன் எழுதி வைத்துள்ள கடிதம் சிக்கியுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 7ஆம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டட ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், அவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 

இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி  நாமக்கல் அருகேயுள்ள மோகனூரில், சுப்பிரமணியனின் உடல் அவரது தோட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. முதலில் சுப்பிரமணியன் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலைசெய்யப்பட்டுள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

சுப்பிரமணியனின் மரணம்குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், தற்போது அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தில், 'அமைச்சர்  விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை என தற்கொலை செய்துகொண்ட சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்' என்கிறது காவல்துறை. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close