Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த சொந்த ஊர்மக்கள்!

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்துசெய்யக்கோரி, நீதிபதி கர்ணனின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் கர்நத்தத்தில் ஊர்ப் பொதுமக்கள் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


சென்னை உயர் நீதிமன்றத்தில், எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியவர், சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, இவர் தடை உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து இவர், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம்செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன்கவுல் உள்பட சில நீதிபதிகள் ஊழல் செய்வதாக 2015-ம் ஆண்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார் கர்ணன். இவரின் இந்தச் செயல்பாடு, நீதிமன்றத்தை அவமதிப்பதாக உச்சநீதிமன்றம் கருதியது.

எனவே, உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. அவரை நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு கர்ணன் முழுமையாக ஒத்துழைக்காத நிலையில், நீதிபதி கர்ணனின் மனநலம்குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவர்கள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. மனநலப் பரிசோதனைக்குக் கர்ணன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

இதை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காவல்துறையினர் அவரை கைதுசெய்ய முயற்சிசெய்துவருகின்றனர். இருப்பினும், அவர் இருக்குமிடம் தெரியவில்லை. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் கர்நத்தத்தில் ஊர்ப் பொதுமக்கள், நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊர் முழுவதும் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close