Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாலிபரின் தலையை காவல்நிலையத்தில் வீசியது ஏன்? கைதானவர்கள் ‘பகீர்’ வாக்குமூலம்

புதுச்சேரியில், வாலிபர் ஒருவரைப் படுகொலைசெய்ததோடு, அவரது தலையைத் துண்டித்து கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தின் வாசலில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நேற்றிரவு, புதுச்சேரி பாகூர் ஏரிக்கரையோரம்...  வாலிபர் ஒருவரைக்  கும்பல் ஒன்று கொலைசெய்துவிட்டுத் தப்பியோடுவதாக, பாகூர் காவல்நிலையத்துக்குப் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு சென்ற காவல்துறையினர், தலை துண்டிக்கப்பட்ட உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில், அந்த வாலிபர் இருளன்சந்தையைச் சேர்ந்த சுவேதன் (17) என்பது தெரியவந்தது.

அடுத்த 15-வது நிமிடத்தில் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், துண்டிக்கப்பட்ட ஒரு தலையை வாசலில் உருட்டிவிட்டு தப்பிச்சென்றனர். அப்போது, காவல்நிலையத்துக்கு வந்திருந்த  பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். காவல்நிலையத்தின் சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

 

 

துண்டிக்கப்பட்ட தலை, கொலை செய்யப்பட்ட சுவேதனுடையது என்பது உறுதியானதும், உடலையும் தலையையும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் புதுச்சேரி காவல்துறையினர். கொலைச் சம்பவம் நடந்த இடம் புதுச்சேரி என்பதால், பாகூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவுசெய்து கொலையாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை சுவேதனைக் கொலைசெய்ததாக, பாகூர் இருளன்சந்தையைச் சேர்ந்த வினோத் (24), தாஸ் (17) என்ற இருவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களுக்கு உதவியாக இருந்த மற்றவர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

cuddalore murder

காவல்துறை விசாரணையில், இவர்கள் அனைவருமே ஒன்றாக இருந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. 10-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, கஞ்சா பழக்கத்துக்கு இவர்கள் அடிமையாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. அடிதடி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் இவர்கள் மீது இருக்கின்றன். ஒரு திருட்டு வழக்கில் சுவேதனைப் பிடித்து விசாரிக்கும்போது, “நான் திருடவில்லை. வினோத்தான் திருடினான்” என்று கூறியதாகக் கூறப்படுகின்றது. இந்த விவகாரத்தில் வினோத்துக்கும் சுவேதனுக்கும் பகை இருந்துள்ளது. ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் பழகி வந்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன், வில்லியனூரில் கொலை செய்யப்பட்ட ரவிசங்கரிடம் பழகிவந்துள்ளார் சுவேதன். ரவிசங்கர் கொலைக்குப் பிறகும் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறார். அவர்களுடன் சேர்ந்து கொலைசெய்ய சுவேதன் திட்டம்போடுகிறார் என்று நினைத்த வினோத், அதற்கு முன்பு அவரைக் கொலைசெய்ய  நினைத்திருக்கிறார். இவர்கள் அனைவரும் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்றும் சொல்கிறது காவல்துறை.

தொடர்ந்து, நேற்றிரவு சுவேதனிடம் 'கஞ்சா அடிக்கலாம் வா' என்று நட்பாகப் பேசி, அவரது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாகூர் ஏரிக்கரையோரம் சென்றிருக்கிறார்கள். அனைவருமே மது அருந்திய நிலையில், சுவேதனுக்கு மட்டும் அதிகமாகக் கொடுத்திருக்கிறார்கள். போதை தலைக்கேறிய பிறகு, சுவேதனை உயிரோடு தலை, கைகளை தனித்தனியே துண்டித்திருக்கின்றனர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால், தலையை மட்டும் எடுத்துக்கொண்டு கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலைய வாசலில் உருட்டிவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டனர். அப்போது, அவர்கள் முழு மது போதையில் இருந்ததாகத் தெரிகிறது.

“கொலை செய்தவுடன், சுவேதனின் உடலைத் தனித்தனியே வெட்டி புதுச்சேரியின் அனைத்துக் காவல் நிலையத்திலும் ஒவ்வொரு பகுதியாகப் போடத்தான் நினைத்தோம். அப்போதுதான் நாங்கள் பரபரப்பாகப் பேசப்படுவோம். ஆனால், அதற்குள் எல்லோரும் வந்துவிட்டதால், தலையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டோம்” என்று சொன்னவர்களிடம், ஏன் தமிழகத்தில் தலையைப் போட்டீர்கள் ? என்று கேட்டார்களாம் காவல்துறை அதிகாரிகள். அதற்கு, “பாண்டிச்சேரி ஜெயில்ல சாப்பாடு சரி இல்லை. அதனால கடலூர் ஜெயிலுக்குப் போகணும்னு முடிவெடுத்துதான் தமிழகப் பகுதியான ரெட்டிச்சாவடி போலீஸ் ஸ்டேஷன்ல தலையைப் போட்டோம்” என்று கூற, வாயடைத்துப்போனார்களாம் காவல்துறை விசாரணை அதிகாரிகள்.

 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன்! ஃபேஸ்புக்குக்கே பிடித்த நம்பர் 1 தமிழ் நியூஸ் ஆப்... Tamil Flash News..!

பதிவிறக்க... க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்ன செய்தார்கள் தமிழ்நாட்டின் 39 எம்.பி-க்கள்? - முழுமையான பெர்ஃபாமன்ஸ் ரிப்போர்ட்
Advertisement

MUST READ

Advertisement
[X] Close