Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக் கடைகள் திறப்பு விவகாரம்... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அடடே பதில்!

'பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்க மாட்டோம்' என்று தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. இந்தக் கடைகளை ஊருக்குள் திறப்பதற்கு தமிழக அரசு முயற்சி செய்துவருகிறது. இதற்கு எதிராக, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். பெரும்பாலும் பெண்களே போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

சில இடங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டும் வருகின்றன. இந்த நிலையில், டாஸ்மாக் தொடர்பான வழக்கு, இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், 'மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அமைக்க மாட்டோம். தமிழகம் முழுவதும் 3000 கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் இதுவரையில் 12 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அரசியல் காரணங்களுக்காகவே டாஸ்மாக் தொடர்பான வழக்குகள் தொடுக்கப்படுகின்றன' என்று தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், 'தமிழகத்தில் கூடுதலாக டாஸ்மாக் கடைகள் அமைக்கும் கொள்கை முடிவை தமிழக அரசு பரிசீலனைசெய்ய வேண்டும். புதிதாக டாஸ்மாக் கடைகள் அமைக்கும்போது, மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே கடைகள் அமைக்கப்பட வேண்டும். மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு பூரண மதுவிலக்கு கொண்டுவந்தால், உயர் நீதிமன்றம் வரவேற்கும்' என்றார். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

தமிழ்நாடு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close