Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரோஜாவை சிக்கவைக்கும் வீடியோ, ஆடியாே பதிவு! அதிரவைக்கும் பெண் அதிகாரி!

அமைச்சர் சரோஜா லஞ்சம் வாங்கியது குறித்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜமீனாட்சி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலராக நியமிக்கப்பட்டவர் ராஜமீனாட்சி. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள தன்னை நிரந்தரமாக பணியில் அமர்ந்த சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் ராஜமீனாட்சி.

இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையர் கரண்சின்காவை இன்று நேரில் சந்தித்து அமைச்சர் சரோஜா மீது,  ராஜமீனாட்சி லஞ்சப் புகார் கூறினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேலை வழங்க அமைச்சர் சரோஜா என்னிடம் லஞ்சம் கேட்டார். பணியிட மாற்றத்துக்காக எனது தந்தையிடம் பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து என்னை சரோஜா மிரட்டினார். அப்போது, அவர் என்னை தரக்குறைவாக பேசினார். பணம் தரவில்லை எனில் வேலையை விட்டு நீக்கிவிடுவதாக அமைச்சர் என்னை மிரட்டினார். ராஜினாமா செய்யாவிடில் கொலை செய்து விடுவதாக சரோஜா மிரட்டினார். எக்காரணத்தைக் கொண்டும் வேலையை ராஜினாமா செய்யமாட்டேன்.

அமைச்சர் சரோஜா லஞ்சம் வாங்கியது குறித்த வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சமூகநலத்துறையில் லஞ்சம் தலைவிரித்தாடினால் பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும். தனது புகாரை லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு மாற்றுவதாக ஆணையர் கூறினார். முதல்வரை சந்தித்து அமைச்சர் மீது புகார் அளிக்க முயன்றேன்" என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close