Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காசிமேடு கடற்கரையில் தீப்பிடித்து எரிந்த படகுகள்!

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் இன்று நண்பகலில் திடீர் என படகுகள் இருந்த பகுதியில் தீப்பிடித்தது. மீன்பிடி தடைகாலம் அமலில் இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்காமல், சேதமடைந்த வலைகள், உடைந்த படகுகளை சீர்செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காசிமேடு கடற்கரைத் துறைமுகத்திலிருந்து நூறு மீட்டர் தூரத்தில் மணற்பரப்பில் மீனவர்கள் தங்களின் படகுகளை நிறுத்தி பழுதுபார்த்து வரும் இடத்தில்தான் இப்படி தீ பற்றிக் கொண்டது. ஐந்து படகுகள் முழுமையாக சேதமாகின. ஓலை கூரைவேய்ந்த குடிசைகளிலும் தீப்பிடித்ததால் அந்தப் பகுதியே புகையால் திணறியது. தீயணைப்புப் படைவீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மீன்பிடிதுறைமுக போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close