Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுவுக்கு எதிராகப் போராடும் 2ஆம் வகுப்பு மாணவன் ஆகாஷின் சபதம் இதுதான்..!

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் அமைந்துள்ளது படூர் கிராமம். அந்த படூர் கிராமத்தில் அமைந்துள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி, கடையையும் அடித்து நொறுக்கினர். அந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி ஆகாஷ் என்ற இரண்டாம் வகுப்பு மாணவன் 'குடியை விடு படிக்க விடு' என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Aakash

இரண்டாம் வகுப்பு மாணவன், மதுவுக்கு எதிராக களமிறங்கியதால், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.  இந்நிலையில் ஆகாஷ் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "மதுவை குடிக்கத் தொடங்கிவிட்டால் அதை விட முடியாது. குழந்தைகள் எப்படி சாக்லெட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களோ, அதேபோல், மதுவுக்காக குடிகாரர்களும் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மதுவை குடித்துவிட்டு வாகனம் ஓட்டுகின்றனர். இதனால், அவர்களுக்கு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பெண்கள், குழந்தைகளை அடிக்கின்றனர்.

Aakash


பள்ளிக் கட்டணம் செலுத்த முடிவதில்லை. சாப்பாடு இல்லை. நிம்மதியான தூக்கம் இல்லை. பீகார் ஒரு ஏழ்மையான மாநிலம். ஆனால், அங்கு மதுக்கடைளை மூடிவிட்டனர். அப்படி இருக்கும்போது தமிழகத்தில் ஏன் மதுக்கடைகளை மூட முடியாது. மதுவுக்கு எதிராக காந்திய வழியில் போராடுவேன். என்னுடன் சிறுவர்களும் இணைந்து போராட இருக்கிறார்கள். படூரில் மட்டுமில்லை. தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும். இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க முயற்சி செய்வேன். வருகின்ற சனிக்கிழமை, படூரில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த உள்ளோம். இதில் கல்லூரி மாணவர்கள், சிறுவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close